மாத சம்பளம் வாங்குவோரின் எதிர்பார்ப்பு புஸ்ஸ்: வருமான வரிச் சலுகையில் மாற்றம் இல்லை

டெல்லி: மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் மிகவும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாதது மாதச் சம்பளதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. பட்ஜெட் என்றாலே வருமான வரி எவ்வளவு, விலக்கு எவ்வளவு என்பது தான் பெரும்பாலான நடுத்தர, ஊதியம் வாங்கும் குடும்பங்களின் பார்வையாக உள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் மாதச் சம்பளம் வாங்குபவர்களின் வருமானவரியில் எந்தவிதமாற்றமும் இல்லை என்று அறிவித்து அருண்ஜெட்லி ஏமாற்றிவிட்டார்.