இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை நீக்கம்

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை எவருக்கேனும் இருப்பின் அரசாணை எண்.23 நிதித் துறை நாள்.12.01.2011ன்  படி அரசு கடித எண்.8764/சி.எம்.பி.சி/2012, நாள்.18.04.12ன் படி தணிக்கை தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த மண்டல கணக்கு அலுவலர், கோயம்புத்தூர் அவர்களால்
தெரிவிக்கப்பட்டுள்ளதாக நமது  பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் சங்கம் மூலம் அறியப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் அனுப்பப்பட உள்ளது என அச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.