குறைந்த விலையி்ல் மருந்து பொருட்கள்: ஜூலை 1 முதல் அமல்

   குறைந்த விலையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை விற்கும் திட்டம் வரும் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவ து. அத்தியாவசிய மருந்து பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யும் திட்டத்திற்கு ஜன அவ்ஷதி என பெயரிடப்பட்டுள்ளது.

              அத்தியாவசிய மருந்துகளாக 504 வகை மருந்துகள் கண்டிறியப்பட்டுள்ளது. இவற்றில் 100 மருந்துகள் முதல் கட்டமாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. தலைநகர் புதுடில்லியில் உள்ள 700க்கும் மேற்பட்ட மருந்துகடைகளி்ல் விற்பனை செய்யப்பட உள்ளது தொடர்ந்து சென்னை , கோல்கட்டா, மும்பை ஆகிய பெருநகரங்களில் இந்தாண்டு இறுதிக்குள் இத்திட்டம் விரிவு படுத்த உள்ளது.மேலும் குறைந்த விலையில் மருந்து பொருட்கள் விற்பனை செய்ய உள்ளதால் தரம் குறித்து தீவிரமாக கண்காணிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.