3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் திறனை பரிசோதிக்க சிறப்பு தேர்வு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 2014-15ம் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டை அளவீடு செய்யும் வகையில் அர சு, நகராட்சி, நலத்துறை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.


பள்ளிக்கு 30 மாணவர்கள் வீதம் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுக்கு வட்டாரத்திற்கு 3, 5ம் வகுப்புகளுக்கென்று 10 பள்ளிகளும், 8ம் வகுப்புக்கு 10 பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டு தேர்வு நடத்தப்படும். தேர்வுகள் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி அறிவித்துள்ளார்.
மேலும் தற்போது தேர்வு நடத்துவதற்காக வட்டாரத்தில் 30 கண்காணிப்பாளர்களை தேர்வு செய்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைவருக் கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வில் சேகரிக்கப்பட்ட விபரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த கற்றல் திறன் மதிப்பீடு செய்யப்படும். இந்த முடிவுகள் அடிப்படையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.