டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 26

கோப்புப் படம்: சிவ சரவணன்
இந்திய அரசியலமைப்பு
746. இந்திய அரசியலமைப்பின்படி மைய பட்டியலில் (Central List) உள்ள துறைகள் எத்தனை?

747. மாநிலப் பட்டியலில் (State List) எத்தனை துறைகள் உள்ளன?
748. பொதுப்பட்டியலில் (Concurrent List) உள்ள துறைகள் எத்தனை?
749. இந்திய தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்து எந்த பதவிக்கு இணையானது?
750. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் பங்கீடு குறித்து பரிந்துரை செய்ய எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழு நியமிக்கப்படுகிறது?
751. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகளும், நீதித்துறையின் நீதிப்புணராய்வு அதிகாரமும் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
752. சொத்துரிமையை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கிய சட்டத்திருத்தம் எது?
753. மாநில ஆளுநர்களை நியமிப்பவர் யார்?
754. இந்திய அரசியலமைப்பின் எந்தப்பிரிவு தேர்தல் ஆணையம் அமைக்க வகைசெய்கிறது?
755. மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களும் சட்டப்படி யாரிடம் இருக்கிறது?
756. குடியரசுத்தலைவர் ஓராண்டில் குறைந்தபட்சம் எத்தனை முறை பாராளுமன்றத்தை கூட்டுகிறார்?
757. லோக்சபா எனப்படும் மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
758. குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருக்கும்போது குடியரசு துணைத்தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத்தலைவர் பொறுப்பு வகிக்கலாம்?
759. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமல் அமைச்சராக நியமிக்கப்படும் ஒருவர், எவ்வளவு காலத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
760. எந்த ஒரு அமைச்சரையும் பதவி விலகக்கோரும் அதிகாரம் படைத்தவர் யார்?
761. மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம்பெற்ற அமைப்பு எது?
762. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக செயல்படுவது எது?
763. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act) எப்போது கொண்டுவரப்பட்டது?
764. மாநில ஆளுநரை எந்தவித காரணமும் குறிப்பிடாமல் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் பெற்றவர் யார்?
765. மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை (Advocate General) நியமிப்பவர் யார்?
766. டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பவர் யார்?
767. ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட பின்னரும் அடுத்த புதிய சட்டப்பேரவை முதல் தடவையாக அமரும் வரை பதவியில் நீடிப்பவர் யார்?
768. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது என்ன?
769. இந்திய தலைமை தேர்தல் மற்றும் தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
770. உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எந்த தேர்தல் ஆணையம்?
771. நகர்பாலிகா சட்டம் என்பது எத்தனையாவது சட்டத்திருத்தம்?
772. மாநகர தந்தை, மாநகரின் முதல் குடிமகன் என அழைக்கப்படுவர் யார்?
773. கிராம சபை ஆண்டுக்கு எத்தனைமுறை கூட வேண்டும்?
774. குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
775. உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
776. கிராம ஊராட்சித் தலைவர் எந்த முறையில் தேர்வுசெய்யப்படுகிறார்?
777. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எவ்வளவு காலம் ஆனது?
778. மன்னர் மானிய ஒழிப்புக்கு வகை செய்த சட்டத்திருத்தம் எது?
779. லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது எந்த சட்டத்திருத்தம்?
780. குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அதிகாரம் எந்தப்பிரிவில் உள்ளது?
விடைகள்
746. 97
747. 66
748. 47
749. உச்சநீதிமன்ற நீதிபதி
750. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை
751. கனடா
752. 1978-ம் ஆண்டின் 44-ஆம் சட்டத்திருத்தம்
753. குடியரசுத்தலைவர்
754. சட்டப்பிரிவு 324
755. குடியரசுத்தலைவர்
756. இரண்டுமுறை
757. குடியரசுத்தலைவர்
758. 6 மாதங்கள்
759. 6 மாதங்கள்
760. பிரதமர்
761. பாராளுமன்றம்
762. உச்ச நீதிமன்றம்
763. 2005
764. குடியரசுத்தலைவர்
765. ஆளுநர்
766. ஆளுநர்
767. சட்டப்பேரவை சபாநாயகர்
768. 62
769. 6 ஆண்டுகள்
770. மாநில தேர்தல் ஆணையம்
771. 74-வது சட்டத்திருத்தம்
772. மேயர்
773. 4 முறை
774. 1984
775. ரிப்பன் பிரபு
776. மக்களால் நேரடியாக
777. 11 மாதங்கள், 17 நாட்கள்
778. 26-வது சட்டத்திருத்தம்
779. 31-வது சட்டத்திருத்தம்
780. சட்டப்பிரிவு 143