தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கேட்டு வழக்கு தொடர்ந்த மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது சுப்ரீம் கோர்ட்டை அணுகும்படி, ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை,
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் வழங்க கோரி வழக்கு தொடர்ந்த மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என்றும் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், கே.எஸ்.நவீன்பிரியா உட்பட 28 மாணவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
மருத்துவ கல்வி பிளஸ்–2 பொதுத் தேர்தல் நாங்கள் அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் செய்தோம். முதல் 3 கவுன்சிலிங்கிலும் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை. சிலருக்கு தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது. ஆனால், தனியார் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், நாங்கள் சேரவில்லை.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 30–ந் தேதி தாகூர் மருத்துவக் கல்லூரி, திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தங்களது கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரப் பட்டியலை வெளியிட்டது.
இடம் வழங்க வேண்டும் அந்த பட்டியலில், பிளஸ்–2 தேர்வில் எங்களை விட குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, அதிக மதிப்பெண் பெற்றுள்ள எங்களுக்கு அந்த 2 கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–
மருத்துவக் கல்வி தேர்வுக்குழு தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் பட்டியலை அனுப்புவதற்கு பதிலாக, வேறு ஒரு பட்டியலை இந்த 2 கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளது தெரியவருகிறது.
கேட்க முடியாது ஆனால் இந்த தேர்வுக்குழு வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளியில் சேர விருப்பமில்லை என்று ஒரு மாணவன் கூறி விட்டால், அவனுக்கு பின்னால் வரும் மாணவனுக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டு விடும். இந்த ஒதுக்கப்பட்ட இடத்தை, விருப்பமில்லை என்று மறுத்த மாணவன் மீண்டும் கேட்க முடியாது என்று கூறியுள்ளது.
இந்த காரணத்தை கூறி, மனுதாரர்களை விட குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர் பட்டியலை இந்த 2 மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேர்வுக்குழு அனுப்பியுள்ளது.
கல்விக் கட்டணம் பொதுவாக அரசு மருத்துவ கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரியில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால், மனுதாரர்கள் தனியார் கல்லூரியில் வசூலிக்கும் அதிக கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாததால், தங்களது இயலாமையை எடுத்துக் கூறியுள்ளனர்.
இவர்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாத காரணத்துக்காக, அவர்களது பெயரை தகுதி பட்டியிலில் இருந்து தேர்வுக்குழு நீக்கியுள்ளது. இது மனுதாரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
மாணவர்கள் பாதிப்பு இப்போது, இந்த 2 கல்லூரிகளுக்கும் தேர்வுக்குழு அனுப்பிய மாணவர்கள் பெயர் பட்டியலை ரத்து செய்து விட்டு, மதிப்பெண் அடிப்படையில் புதிதாக பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டால், அந்த கல்லூரியில் சேர்ந்துள்ள 216 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் 30–ந் தேதிக்கு மேல் மாணவர்கள் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த 2 கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டின்கீழ் நிரப்பவேண்டிய 84 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்கள் இந்த கல்வியாண்டில் நிரப்பப்படாமல், வீணாக போய் விடக்கூடாது. அதேநேரம், அந்த காலியிடங்களில் மனுதாரர்களை கொண்டு நிரப்பவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டால், மனுதாரர்களை விட அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், இந்த ஐகோர்ட்டுக்கு (வழக்கு தொடர) வந்துவிடுவார்கள்.
வழங்க முடியாது எனவே, இந்த மனுதாரர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் வழங்க முடியாது. எல்லாரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.