அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதலாக 22 ஆஸ்பத்திரிகள் இணைப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் மூலமாக இது செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி ரூ.4 லட்சம் அளவில் மருத்துவக் காப்பீட்டு வசதியைப் பெறலாம்.
எந்தெந்த ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றால், காப்பீட்டு வசதியைப் பெறலாம் என்பதற்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் இருக்கும் நிலையில், பில்ரோத், காவேரி, விஜயா ஆஸ்பத்திரிகள் உட்பட கூடுதலாக 22 ஆஸ்பத்திரிகளை அந்தப் பட்டியலில் அரசு சேர்த்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள பன்நோக்கு நவீன சிறப்பு அரசு மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.