தற்காலிக ஆசிரியர்களை விரிவான வழிகாட்டுதல்கள் வெளிவரும் வரை தேர்வு செய்ய வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை

 தற்காலிக ஆசிரியர்களை விரிவான வழிகாட்டுதல்கள் வெளிவரும் வரை தேர்வு செய்ய தடை!!



முதன்மை கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு.


பள்ளி மேலாண்மை குழு வழியாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதி பெற்ற நபர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற *விரிவான தெளிவுரைகள் வழங்கப்படும் வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது*.  

இதுகுறித்த தெளிவுரைகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதற்குப் பிறகு உரிய முன்னுரிமைகளை பின்பற்றி தகுதியுள்ள அனைவருக்கும் வாய்ப்பளித்து தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். 

முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதனை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.