சிறப்பு கிராம சபை கூட்டப்பொருள் (24-04-2022) Govt letter avail

 கூட்டப்பொருள்-1


• வறுமையில்லா ஊராட்சி என்பது, யாரும் மீண்டும் வறுமை நிலைக்கு சருக்கிவிடாத அளவிற்கு சமூக பாதுகாப்பு கொண்டிருக்க வேண்டும். அனைவருக்கும் மேம்பட்ட வாழ்ககை சூழல், வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தும் கிராம ஊராட்சியாக அமைத்தல்.


கூட்டப்பொருள்-2


கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நல வாழ்வு வாழ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிராம ஊராட்சியாக அமைத்தல்.


கூட்டப்பொருள்-3


• அனைத்து குழந்தைகளும், வாழவும், வளரவும், பங்கேற்கவும் தேவையான பாதுகாப்பு அளித்து வருவதன் மூலம் அவர்களின் முழு திறன்கள் வெளிவரும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்தல்.


கூட்டப்பொருள் 4.


. அனைத்து வீடுகளிலும் பயன்படுத்த கூடிய நிலையில் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு தரமான குடிநீர் வழங்கும் நிலை, முறையான நீர் மேலாண்மை மற்றும் வேளாண்மை பணிகளுக்கு தேவையான நீரை அளித்து நீர் சார்ந்த சூழலை தொடர்ந்து பாதுக்காத்தல்.


கூட்டப்பொருள் 5


இயற்கையின் வளங்கள் மற்றும் பசுமையை நம்முடைய எதிர் கால சந்ததிகளுக்கு கொடுக்கும் வகையில் பாதுகாக்கவும், மாற்று எரிசக்தியை பயன்படுத்துதல், தூய்மையை கடைபிடித்தல் மற்றும் சுற்றுபுறச்சூழலை பாதுகாத்து பருவ நிலை மாற்றத்தை எதிர் கொள்ளத்தக்க கிராம ஊராட்சியாக அமைத்தல்.


கூட்டப்பொருள்-6


• அனைவருக்கும் குடியிருக்க மலிவான, பாதுகாப்பான வீடு, தேவையான அடிப்படை சேவைகள் வழங்குதல் போன்றவற்றுடன், தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட கிராம ஊராட்சியாக அமைத்தல்.


கூட்டப்பொருள்7


. தகுதியுடைய அனைவரையும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் இணைக்க வேண்டும். அனைவரும், தாங்கள் அரவணைப்புடன் கவனிக்கப்படுகிறா;கள் என்பதை உணர நடவடிக்கைகள் எடுத்தல்.


கூட்டப்பொருள்8


கிராம ஊராட்சியில் திறம்பட நடைபெறும் நல்ல ஆளுமையுடன் அனைத்து நலத் திட்ட பயன்கள், அடிப்படை சேவைகள் அனைத்தும் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல்.


கூட்டப்பொருள்9


பாலினி சமத்துவ அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை வலிமைப்படுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல்.


கூட்டப்பொருள் 10


'நிலைத்த வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் பயன்களை பெறும் வகையில், இடைவெளிகளைக் குறைத்து, தரமான 'கிராம ஊராட்சி வளாச்சித் திட்டத்தை' தயாரித்து அதனை திறம்பட செயல்படுத்துவோம் என்று முடிவு எடுத்து அதன்படி செயல்படுவோம் என்று தீர்மானித்தல். கூட்டப்பொருள்11


• நிலைத்த வளர்ச்சியை அடைவதில் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக பங்குள்ளது. அவர்களை முழு உத்வேகத்துடன், முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்கள் வாழ்வில் மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுத்தல்.


கூட்டப்பொருள்12


. மக்கள் சக்தியை ஒன்று திரட்டி, அரசின் பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புக்கள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியோரை எங்கள் முயற்சிகளின் பங்காளர்களாக்கி அவர்களோடு இணைத்து பணிகளை செவ்வனே செய்து முடித்தல்.


உறுதிமொழி


நிலைத்த வளரச்சிக்கு மையமாக இருப்பது மக்களே என்பதை நாங்கள் உணர்கிறோம். நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு எங்களுக்கு பயன்தரக்கூடிய, 'அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும்', 'சமூக மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் மேம்படுத்துவோம்.


 நாங்கள் சுதந்திரம், அமைதி, பாதுகாப்பு, நல்ல ஆளுமை, சட்ட விதிகள் வளரச்சிக்கான உரிமைகள், மேம்பட்ட வாழ்க்கைச் சூழலுக்கான உரிமை,நல வாழ்விற்கான உரிமை, உணவிற்கான உரிமை, உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை உறுதிபடுத்துகிறோம்.


நம்முடைய நல்ல எதிர் காலத்திற்கும், நீடித்து நிலைக்க கூடிய வளர்ச்சிக்கும் 'பாலின் சமத்துவம்' மற்றும் 'பெண்களை ஊக்கப்படுத்தி அதிகாரம் அளித்தல்' மூலமாகத்தான் இயலும் என்பதை உணர்ந்துள்ளோம்.


அனைவருக்கும் சமவாய்ப்புக்கள் அளித்து, குறிப்பாக குழந்தைகள் தங்களுடைய திறமைகளை வெளிபடுத்தும் வகையில் பாதுகாப்புடன் வாழவும் வளரவும் நடவடிக்கைகளின் எடுப்பதை நாங்கள் நம்புகிறோம்.


மக்களை மையப்படுத்தி, நிலைத்த வளர்ச்சியினை சமுதாயத்தில் உள்ள பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் ஆகியோரின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த, நாங்கள் வலியுறுத்துகிறோம்.


பருவ நிலை மாற்றத்தின் விளைவாக இடற்படுகள்/நெருக்கடிகள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன என்றும் இத்தகைய நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் அளவு எங்களை மிகவும் பாதிக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.


பூமி மற்றும் அதன் சூழல் அமைப்பு தான் நம் வாழ்விடம் என்றும், அத்தகைய பூமித் தாயின் ஆரோக்கியத்தையும், நேர்மையையும் மீட்டு எடுப்போம் என்று உறுதி கொள்கின்றோம். 


ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் கடிதம்


அனுப்புநர்


பிரவீன் பி.நாயர் இ.ஆ.ப., இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்ககம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15. 


ந.க.எண்.48917/2021/ப.ரா.2-3 நாள்: 11.04.2022 

பெறுநர் 

மாவட்ட ஆட்சித் தலைவர், அனைத்து மாவட்டங்கள். 

அய்யா/அம்மையீர் 

பொருள்: கிராம சபா கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நீடித்த வளர்ச்சி இலக்கு 24.04.2022 அன்று கிராம சபா கூட்டம் நடத்துதல் தொடர்பாக. CFC-1A9 பார்வை: மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், கடித எண். நே மு.க 11015/124/2021 - CB நாள்:28.3.2022


தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் பகுதியாக 24.04.2022 அன்று நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்திடுமாறு பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும் உறுதி மொழி எடுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில்


(meetingonline.gov.in) உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


மேலும் கிராமசபா கூட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை 24.4.2022 அன்று நல்ல முறையில் நடைபெற நடவடிக்கை எடுத்திடவும் கூட்டம் நடைபெற்றமைக்கான உரிய அறிக்கையினை தொடர்புடைய கிராம ஊராட்சிகளிடமிருந்து பெற்று இவ்வியக்ககத்திற்கு 30.4.2022-குள் அனுப்பி வைக்குமாறும்

கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


இணைப்பு:


1.கூட்டப்பொருள் மற்றும் உறுதிமொழி


2.பார்வையில் காணும் கடிதத்தின் நகல்


ஒம்/-பிரவீன் பி. நாயர் இயக்குநர்


நகல் :


1. அரசு முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தலைமைச் செயலகம், சென்னை 9.


2. திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, அனைத்து மாவட்டங்கள்.


3. உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அனைத்து மாவட்டங்கள். 

Click here to view the Govt letter