வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL ) எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கலாம் ? RTI Letter Reply.

 வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL ) எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கலாம் ? RTI Letter Reply.


தற்செயல் விடுப்பு என்பது எந்தெந்த சூழ்நிலையில் எடுக்க வேண்டும் .


தவிர்க்க இயலாத சூழலில் குறுகிய காலத்திற்கு எடுக்கலாம்.


 உள்ளூர் விடுமுறையுடன் ( முன் அல்லது பின் ) இணைத்து CL , R.L. , சிறப்பு தற்செயல் விடுப்பு மற்றும் ஈடு செய் விடுப்பு எடுக்கலாம் . 


10 நாட்களுக்கு மிகாமல் எடுக்கலாம்


பள்ளியில் முற்பகல் ஒரு ஆசிரியர் பணி செய்த பின் ( மறுநாள் உள்ளூர் விடுமுறையாக இருக்கும்பட்சத்தில் ) உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் த.வி. எடுக்கலாம் .


எடுக்கலாம்


ஆசிரியர் குறைந்தபட்ச ம.வி .2 நாட்கள் எடுக்கலாமா ? 


எடுக்கலாம்


MPED முடிந்து உடற்கல்வி ஆசிரியராக 10 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் பணிபுரிந்து ப.ஆ. பதவி உயர்வு பெற்றவர் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 - க்கு ( MPED ) முடித்திருக்கும்பட்சத்தில் பதவி உயர்வுக்குத் தகுதியானவரா ?


தகுதியானவர்


 உள்ளூர் விடுமுறையைத் தொடர்ந்து அரசு விடுமுறை எனில் பின்வரும் தொடர் நாட்களில் எந்தெந்த விடுப்பு வழங்கலாம் எந்த விடுப்பு வழங்க இயலாது.


CL வழங்கலாம்,  EL, ML வழங்க இயலாது.


 அரசு உநிய / மேல்நிலைப் பள்ளிகளில் வரையறுக்கப்பட்ட விடுப்ப எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கலாம் 


HM முடிவு


அவ்வாறு வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL ) எடுத்த ஆசிரியர்கள் தவிர எத்தனை ஆசிரியர்களுக்கு ( CL ) வழங்கலாம் .


HM முடிவு


 அவ்வாறு வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL ) எடுத்த ஆசிரியர்கள் தவிர பிற ஆசிரியர்களுக்கு விடுப்பு தேவைப்படும் பட்சத்தில் எந்தவகையான விடுப்பு வழங்கலாம்.


எல்லாவித விடுப்பு எடுக்கலாம்.


அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ML , CL , RL , & EL போன்ற விடுப்புகளில் உள்ள ஆசிரியர்கள் தவிர எத்தனை ஆசிரியர்களின் வருகைப் பதிவு இருந்தால் அது வேலை நாளாக கருதப்படும் ? அவ்வாறு இல்லையெனில் அந்த நாள் விடுமுறையாக கருதப்படுமா ? அல்லது வேலை நாளாகக் கருதப்படுமா . 


HM முடிவு


காலாண்டு , அரையாண்டு விடுமுறை ஆரம்பிப்பதற்கு மந்தி நாள் ( அ ) விடுமுறை முடிந்த மறுநாள் எந்தெந்த விடுப்பு எடுக்கலாம் ?


எல்லாவித விடுப்பு எடுக்கலாம்.,