10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு உண்டு

  10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு உண்டுசென்னை : 'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்' என, பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா பரவலை தடுக்கும் வகையில், 15 முதல் 18 வயது வரையுள்ள மாணவ - மாணவியருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி பள்ளிகளில் துவங்கியுள்ளது. இதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வர். அதனால், வரும் 10ம் தேதிக்கு பிறகும் மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து விவாதித்து, உரிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார். கடந்த கல்வி ஆண்டில், பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு அது போன்ற நிலை இருக்காது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.