EMIS ல் உள்ள ஆசிரியர், மாணவர்களின் தகவல்களை- Whatsapp- குழுவில் பகிர கூடாது என உத்தரவிட வேண்டி – முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

 HomeCM CELLEMIS ல் உள்ள ஆசிரியர், மாணவர்களின் தகவல்களை- Whatsapp- குழுவில் பகிர கூடாது என உத்தரவிட வேண்டி – முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

EMIS ல் உள்ள ஆசிரியர், மாணவர்களின் தகவல்களை- Whatsapp- குழுவில் பகிர கூடாது என உத்தரவிட வேண்டி – முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

EMIS இணையதளத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை வாட்ஸ்அப் பொதுக்குழுவில் பதிவிட சொல்லுதல் கூடாது என்று உத்தரவிட வேண்டி தமிழகத்தின் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு

 

மதிப்பிற்குரிய முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம் ! தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரமும் , பெற்றோர்களின் வங்கி கணக்கு , இமெயில் மற்றும் செல் நெம்பர் உட்பட அனைத்தும் EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது . மேலும் ஆசிரியர்களின் அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது . EMIS இணையத்தளமானது பாதுகாப்பானது என்பதின் அடிப்படையில் தமிழக அரசு பயன்படுத்தி வருகிறது . ஆனால் அந்த பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக இருக்குமாறு கல்வி அலுவலர்களும் ஆசிரியர் பயிற்றுநர்களும் செயல்படுகிறார்கள் . அதாவது பள்ளிக் கல்வித் துறையின் மாநில அளவில் உள்ள உயர் அலுவலர்கள் ஏதாவது ஒரு தகவலை சரி பார்க்க சொல்லி கேட்டாலோ அல்லது விவரங்கள் ஏதேனும் தேவையெனில் உடனடியாக அந்த கோப்புகளை EMIS இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தங்களுக்கு என்று வைத்துள்ள வாட்ஸ்அப் பொது குழுவில் அனைத்து மாணவர்களின் விவரமும் அனைத்து ஆசிரியர்களின் விபரமும் உடனடியாக பகிரப்படுகிறது . அந்த வாட்ஸ்அப் குழுவில் சில சமயங்களில் ஆசிரியர் அல்லாதவர்களும் உள்ளனர் . அனைத்து தகவல் தொகுப்பையும் பொதுக்குழுவில் பதிவிடுதல் என்பது பாதுகாப்பின்மையை ஏற்படுத்திவிடும் ஆகையால் மாணவர்களின் விவரங்கள் கருத்தில் கொண்டு EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து தகவல்களையும் பொதுக்குழுவில் அலுவலர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் வெளியிடுதல் மற்றும் பதிவிட சொல்லுதல் கூடாது என்று உத்தரவிட்டு EMIS இணையதளத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம் .