ஏடிஎம் சேவை கட்டணம் உயர்கிறது - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி*
*ஜனவரி 1 ஆம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*
வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் 3 முறையும் மாநகரம் அல்லாத ஏடிஎம் மையங்களில் 5 இலவச பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும்.
இதை தாண்டி தங்கள் வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் 20 ரூபாயும் மற்ற வங்கி ஏடிஎம்களின் பணம் எடுத்தால் ஜி.எஸ்.டி. உடன் 23.6 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2022 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது