12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்

 

வெள்ளி முதல் வியாழன் வரை ( 3.12.2021 - 9.12.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


புதன், குரு சாதக நிலையில் உள்ளனர். துர்கை வழிபாடு நலம் அளிக்கும்

அசுவினி: வருமானம் அதிகரிக்கும். லட்சியத்தில் வெற்றிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கிட்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

பரணி: சந்தித்தவர்களால் சந்தோஷம் கிட்டும். வருமானம் எதிர்பார்த்தபடியே அமையும். வருங்காலக் கனவுகளை நனவாக்க பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை.

கார்த்திகை, 1ம் பாதம்: விரயங்கள் குறையும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறர் உதவிகளை நாடிய நிலை மாறும். பணியில் தொய்வு ஏற்படாமலிருக்க தன்னம்பிக்கை தேவை. மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 3.12.2021 காலை 7:51 மணி - 5.12.2021 காலை 10:11 மணி


ரிஷபம்


புதன், செவ்வாயால் நற்பலன் உண்டு. விநாயகர் வழிபாடு துயர் தீர்க்கும்கார்த்திகை 2,3,4: இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டும். குடும்ப அமைதி குறையாமலிருக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.


ரோகிணி: குடும்பத்தில் ஒருவருக்குத் திருமண முயற்சி வெற்றி பெறும். வரவை விட செலவு சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. விரயங்கள் குறையும்.. வீடு மாற்றம் பற்றி யோசிப்பீர்கள்.

மிருகசீரிடம் 1,2: சச்சரவுகள் அகன்று சமாதானமாகும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். எதிரிகளிடம் அதிகக் கவனம் தேவை. இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

சந்திராஷ்டமம்: 5.12.2021 காலை 10:12 மணி - 7.12.2021 பகல் 12:48 மணி


மிதுனம்


ராகு, கேது, குரு நன்மைகளை வழங்குவர். அனுமார் வழிபாடு நன்மை தரும்.

மிருகசீரிடம், 3,4: வெளியூர்ப் பயணத்தால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். அலுவலகப் பணிகளில் சிறுதடை, தாமதங்கள் வந்து நீங்கும். இடம் பூமியால் லாபம் கிட்டும். எதிர்பார்த்த விஷயங்களில் லேசான தடைதாமதங்கள் ஏற்படலாம்.

திருவாதிரை: பணியிடத்தில் எதிர்பாராத பாராட்டுக் கிடைக்கும். பக்குவமாகப் பேசி நன்மைகளைச் சாதித்துக் கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் சந்திப்பு கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு.

புனர்பூசம், 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு வரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு வரலாம். வெளிநாட்டு வாய்ப்பை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும்.

சந்திராஷ்டமம்: 7.12.2021 பகல் 12:49 மணி - 9.12.2021 மாலை 4:32 மணி


கடகம்


புதன், சுக்கிரன், சந்திரன் அனுகூல பலனை தருவர். சிவன் வழிபாடு துன்பம் போக்கும்.

புனர்பூசம்,4: குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுவார்கள். பிரிந்து சென்ற நண்பர்களும் உறவினரும் பிரியமுடன் வந்திணைவர். மனதில் பணி பற்றி இருந்து வந்த குழப்பங்கள் மாறும்.

பூசம்: யோகமான வாரம். நினைத்த விஷயத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வரலாம்.

ஆயில்யம்: பணியிடத்தில் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். அமைதி கூடும். அனுகூலம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிக்கு நண்பர் ஒருவர் ஒத்துழைப்பு செய்வார்.


சிம்மம்


செவ்வாய், புதன், குரு அற்புத பலன்களை தருவர். பிள்ளையார் வழிபாடு சிரமம் தீர்க்கும்மகம்: எடுத்த முயற்சியில் எளிதில் வெற்றி கிட்டும். தொழில் வளம் கருதி புதிய கூட்டாளிகளைச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும்.


பூரம்: ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வர வேண்டிய பணம் இயல்பாய் வசூலாகும். பழைய முதலீட்டால் லாபம் கிட்டும். சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

உத்திரம்,1: அதிகாரிகள் அன்பாய் நடந்து கொள்வர். சுப பேச்சுகள் முடிவாகும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும்.


கன்னி

சந்திரன், கேது, புதன் நன்மையளிக்கும் அமர்வில் உள்ளனர். குரு வழிபாடு வளம் தரும்.

உத்திரம்,2,3,4: பாதியில் நின்ற பணியை முனைந்து முடிப்பீர்கள். பலநாள் விருப்பம் ஒன்று நிறைவேறும். புதிய மனிதர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. திடீர் செலவு ஒன்றால் சந்தோஷம் வரும்.

அஸ்தம்: வாய்ப்பு ஒன்று தேடி வரும். சொந்தங்களால் சிறுசிறு நன்மை உண்டு. நண்பர்களுக்கு விருந்தளித்து மகிழும் வாய்ப்பு கிட்டும். கடன் தொல்லை தீரும்.

சித்திரை, 1,2: சொந்த பந்தங்களால் துயர் ஒன்று விலகும். நினைத்தது நிறைவேற நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தேக ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல்கள் தோன்றி ஓரிரண்டு நாட்களில் மறையும்.


துலாம்


குரு, புதன், சந்திரன் அற்புத நற்பலன்களை தருவர் அம்பாள் வழிபாடு சுபிட்சம் அளிக்கும்.
சித்திரை, 3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும். பம்பரம்போல் சுழன்று பணிபுரிவீர்கள். பகையொன்று மனம் மாறி நட்பாகும். அயல்நாட்டிலிருந்து சந்தோஷச்செய்தி வந்து சேரும். புதிய ஆடை, நகை சேர்க்கை ஏற்படும்.

சுவாதி: உற்சாகம் அதிகரித்து, சோர்வு நீங்கும். அலுவலகப் பணிகளில் பாராட்டுக் கிடைக்கும். பணம் மிக நல்ல வழிகளில் செலவாகும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.

விசாகம் 1,2,3: புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். தொழில்/ வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நின்றுபோயிருந்த விஷயங்களைத் தொடருவது பற்றிச் சிந்திப்பீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.


விருச்சிகம்


குரு, சனி புதன் அனுகூல பலனைத் தருவர். பிள்ளையார் வழிபாடு நிம்மதி தரும்.

விசாகம்,4: பிரிந்து சென்றவர்களைப் பற்றிக் கவலை வேண்டாம். பொருளாதார நிலை உயரும். தொழில் ரீதியான பயணங்கள் உண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும். பணியிடத்தில் அனுகூலம் உண்டு.

அனுஷம்: புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு சந்தோஷத் தகவல் உண்டு. சமயோசித புத்தியால் நன்மை காண்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் சந்தோஷமும் பெருமிதமும் தரும்.

கேட்டை: இடம், பூமியால் லாபம் கூடும். அரசியல் தலைவர்களின் அன்பு கிட்டும். குறிக்கோள் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சியுடன் கூடிய பரபரப்பான வாரம். ஆரோக்யம் மேம்படும்.


தனுசு

சந்திரன், செவ்வாய், ராகு, கேது தாராள நற்பலன்களை வழங்குவர். குருவாயூரப்பன் வழிபாடு நலம் தரும்.

மூலம்: உடன்பிறப்புகள் அன்பு காட்டுவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை விலக்குவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணத்தைச் சற்றுத் தள்ளிப் போடலாம்.

பூராடம்: பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்னைகள் ஏற்படாமல் கவனம் தேவை. வீட்டு விவகாரங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. பிடிவாத குணத்தைவிட்டு நன்மை காண்பீர்கள்.

உத்திராடம்,1: வெற்றிச் செய்தி ஒன்று தேடி வரும். சிறிய பண வரவு உண்டு.. வெளிவட்டாரத்தொடர்பு விரிவடையும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.


மகரம்


சூரியன், புதன், கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். ஆஞ்சுநேயர் வழிபாடு வளம் தரும்.

உத்திராடம்,2,3,4: நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதியடைவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இந்த வாரம் சந்தித்து மகிழ்வீர்கள். வருமானம் நிம்மதியளிக்கும்.

திருவோணம்: உழைப்புக்கேற்ற பலன் இல்லை என்ற தேவையற்ற உறுத்தலை விலக்குங்கள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து நன்மை காண்பீர்கள். வாழ்க்கைத் துணையின் விருப்பம் ஒன்று நிறைவேறும்.

அவிட்டம்,1,2: விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நினைத்தது நிறைவேறப் பெருமுயற்சி எடுப்பீர்கள். நிகழ்காலத் தேவை ஒன்றை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.


கும்பம்


புதன், சூரியன், செவ்வாயால் அளப்பரிய நன்மை கிடைக்கும். சனீஸ்வரர் வழிபாடு சுபிட்சம் தரும்.

அவிட்டம், 3,4: வெளிநாட்டுத் தொடர்பு விஷயமாக அதிகாரிகளின் சந்திப்பு அனுகூலமாக அமையும். எதிர்பார்த்த சுபசெய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

சதயம்: சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படலாம். உணவு மற்றும் தூய்மை விஷயத்தில் எச்சரிக்கை தேவை. எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் இனிய அனுபவம் கிடைக்கும்.

பூரட்டாதி,1,2,3: எதிர்பார்ப்பு நிறைவேறா விட்டாலும் ஏமாற்றம் இருக்காது. உறவினர்களின் வருகையில் வீட்டில் கலகலப்பு உண்டாகும். பணியாளர்கள் தங்களின் உழைப்பால் நன்மை அடைவர்.


மீனம்


சூரியன், புதன், சனி சாதகமான வழங்குவர். தட்சிணாமூர்த்தி வழிபாடு துயர் தீர்க்கும்.
பூரட்டாதி, 4: கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வீட்டை விரிவு செய்து கட்டுவதற்கான அறிகுறிகள் தோன்றும். எதிரிகள் விலகுவர். நண்பர் ஒருவருக்கு உங்களால் நன்மை ஏற்பட்டு நெகிழ்ச்சியடைவார்.

உத்திரட்டாதி: குழந்தைகள் வாழ்வில் வளர்ச்சி காண்பார்கள். பணத்தைக் கையாளும்போது கூடுதல் கவனம் தேவை. வேலையாட்களிடம் அன்பாகப் பேசி வேலை வாங்கி வெல்வீர்கள்.

ரேவதி: எதிர்பாலினத்தினரின் ஒத்துழைப்புக் கிட்டும். ஆரோக்கியம் சீராகி சக பணயாளர் ஒருவருக்கு வந்த பிரச்னை அகலும்.செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 1.12.2021 அதிகாலை 4:48 மணி - 3.12.2021 காலை 7:50 மணி.