SBI வங்கியில் சம்பள கணக்கு இருக்கா… அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க!

 

SBI வங்கியில் சம்பள கணக்கு இருக்கா… அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க!

எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு லாக்கர் கட்டணத்தில் 25% வரை தள்ளுபடி உண்டு. அரசு மற்றும் தனியார் என அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சம்பளம் தற்போது வங்கி கணக்குகள் வாயிலாகவே வழங்கப்படுகிறது.

நீங்கள் SBI வாடிக்கையாளராக இருந்தால், சம்பளக் கணக்கின் மூலம் உங்களுக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன. SBI சம்பளக் கணக்குகளுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அதோடு, ஓவர் டிராஃப்ட், மலிவான கடன்கள், காசோலைகளை இலவசமாக அனுப்புதல், பே ஆர்டர் (pay orders) மற்றும் வங்கி வரைவோலை (demand drafts), இலவசஇணைய பரிவர்த்தனைகள் என பல வசதிகளை வழங்குகின்றன. சம்பள கணக்கை பணம் இல்லாமலேயே பூஜ்ஜிய நிலுவைத் தொகையில் (zero balance) திறக்க முடியும். வழக்கமாக, ஒரு வங்கியில் கணக்கைத் திறக்க, குறைந்தபட்சமாக 1000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

 

MUST READ

TNPSC - Departmental Exam Questions , Syllabus.... click here

 

இது தவிர, பிற வங்கிகள் ஒரு சாதாரண கணக்கில் ஏடிஎம் (ATM) வசதியைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கின்றன.

 

 

தொடர்ந்து சில காலத்திற்கு உங்கள் கணக்கில் சம்பளம் வரவில்லை என்ரால், சம்பளக் கணக்கு, சாதாரணமான சேமிப்புக் கணக்காக

மாறிவிடும். salary account-க்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் திரும்பப் பெறப்பட்டு, அந்த வங்கிக் கணக்கு, சாதாரண சேமிப்புக் கணக்கு போல தொடரும். 

 

MUST READ

e-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி ? (Video)  click here

 

எஸ்பிஐயில் அரசுத்துறை, நிறுவனம் அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனம், மத்திய, மாநில அரசு, பாதுகாப்பு துறை, ரயில்வே, நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல்துறை, இந்திய கடற்கரை மற்றும்

பாதுகாப்புத்துறை பென்ஷனர்களுக்கான சம்பள ‘பேக்கேஜ் திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. பாதுகாப்பு, காவல், தீயணைப்பு உள்ளிட்ட சீருடைய பணியாளர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், விபத்து, போர் , துப்பாக்கிச் சூட்டு போன்ற சம்பவங்களில் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.


MUST READ

DEPARTMENTAL EXAM BOOKS PDF click here


பிற அரசுத் துறையில் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் வாங்கினால் ரூ.1 லட்சமும், ரூ. 50 ஆயிரம் சம்பளத்திற்கு ரூ.5 லட்சமும், ரூ. 50 ஆயிரம் முதல் 1 லட்சம் சமபளம் பெற்றால் ரூ. 15 லட்சமும் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்றவர்களுக்கு ரூ. 20 லட்சமும் ‘பேக்கேஜ் திட்டத்தில் பணப்பலன் கிடைக்கும். சம்பளதாரர் இல்லாவிட்டாலும், நிதி ரீதியாக இது அவரது குடும்பத்தினருக்கும் மிக உதவிகரமாக இருக்கும்

 

தனி நபர் கடன், வீட்டு கடன், கார் கடன், கல்விக் கடன் என பலவற்றிலும் சலுகைககள் உண்டு.

 

குறிப்பாக கடன் செயல்பாட்டுக் கட்டணத்தில் 50% தள்ளுபடி உண்டு. இது தவிர ஓவர்டிராப்ட் வசதியும் உண்டு. இதன் மூலம் இரண்டு மாத சம்பளத்தினை பெற முடியும் எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு லாக்கர் கட்டணத்தில் 25% வரை தள்ளுபடி உண்டு. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் உங்களது சம்பளத்தினை பொறுத்து இந்த சேமிப்பு கணக்குதொடங்கப்படும். சம்பள கணக்கிலேயே நான்கு வகையான கணக்குகள் உள்ள நிலையில், அதனை பொறுத்து சில சலுகைகள் மாறும்.