இ-பதிவு, இ-பாஸ் வித்தியாசம் என்ன?
எப்படி அப்ளை செய்வது?
இ- பதிவு நாளை (17.05.2021) தொடக்கம்: எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரங்கள்!
இ- பதிவு மற்றும் இ- பாஸ் முறைக்கான ஆன்லைன் பதிவு, நாளை முதல் தொடங்க உள்ளது. இதை இணையதளத்தில் எப்படி பதிவு செய்வது என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டத்திற்கு வெளியேவும் செல்ல, இ- பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக இணையதளத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் மூலமாக இ- பாஸ் ( மாநிலங்களிலிருந்து, வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருவதற்கு), இ- பதிவு முறைக்கு விண்ணப்பிக்கலாம்.
முதலில், https://eregister.tnega.org/#/user/pass என்ற இணயதளத்திற்கு செல்லவும்.
நீங்கள் மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய நினைத்தால், மற்றவை/ others என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இதைத்தொடர்ந்து மொபைல் எண் மற்றும் ரகசிய எண் கொடுக்கப்பட்டிருக்கும். அதை பதிவு செய்யவும்.
உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி ( otp) வரும்.
சாலை வழியாக பயணம் செய்ய விரும்புகிறீர்களா அல்லது விமானம்/ அல்லது ரயில் மார்கமாக பயணம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும்.
சாலை வழியாக பயணம் செய்ய நினைத்தால், பின்வரும் ஆவணங்களின் தேவை அவசியம்.
பயணிப்பதற்கான காரணம் குறிப்பிட வேண்டும்.
மருத்துவக் காரணம்/
திருமணம்/
இறப்பு/ முதியோர் பராமரிப்பு
இதில் ஏதேனும் ஒரு காரணத்தை பதிவு செய்ய வேண்டும். கொடுக்கப்பட்ட காரணங்களுக்கான சான்றைப் பதிவேற்ற வேண்டும்.
அடையாள அட்டை
குடும்ப அட்டை,
ஆதார் கார்ட், பான் கார்ட்,
ஓட்டுநர் உரிமம்
இவற்றில் ஏதேனும் ஒன்றின் அத்தாட்சியை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாள எண்ணை தனியாகக் குறிப்பிட வேண்டும்.
பயணிக்கும் வாகனம் எது என்பதை, அதாவது
கார்
, பைக்,
வாடகை டாக்ஸி
இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும். அந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.
எங்கு செல்ல வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்.
இது முதல் படிநிலையே.
அடுத்த படிநிலையில் எங்கிருந்து நீங்கள் புறப்படுகிறீர்களோ அந்த மாநிலம், மாவட்டம் , தாலூகா, வீட்டின் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். அதுபோல் நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அந்த மாவட்டம், தாலூகா, வீட்டின் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து மூன்றாவது படிநிலையில் பயணிகளின் பெயர், ஓட்டுநரின் பெயர், ஓட்டுநரின் கைப்பேசி எண் ஆகியவற்றை வழங்க வேண்டும். இத்துடன் இ- பதிவு முறை நிறைவடைகிறது.
இ-பதிவு, இ-பாஸ் வித்தியாசம் என்ன? VIDEO