விடுமுறை கேட்ட நிலையில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கி உத்தரவு

 


தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளது.

 

*பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால், தங்களுக்கு விடுமுறை

அளிக்கும்படி, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.*

 

*இந்நிலையில், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட உள்ளதாக, நமது நாளிதழில், இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.*

 

*இதுபற்றி, தமிழக தலைமை செயலர், சுகாதார செயலர், பள்ளி கல்வி செயலர் ஆகியோர் ஆலோசனை நடத்தி, பள்ளி பணியில்லாமல் விடுமுறை கேட்கும் ஆசிரியர்களுக்கு, கொரோனா தடுப்பு பணி வழங்க அனுமதித்தனர்.*


 

இதன்படி, முதல் கட்டமாக, துாத்துக்குடி மாவட்டத்தில், 24 ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. அந்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவில்,

 


*'24 ஆசிரியர்கள், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா தடுப்புக்கான, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில், தினமும்''

ஆறு மணி நேரம் பணியாற்ற வேண்டும்' என, கூறியுள்ளார்.*

 Click here to download the order copy

*30க்குள் தடுப்பூசி போட 'கெடு'பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும், 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 30ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

*இந்த உத்தரவை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம், 'வாட்ஸ் ஆப்' மற்றும் ' - மெயில்' வழியே அனுப்பியுள்ளது.*


*மேலும், ஆசிரியர்களின் உடல்நிலையை பொறுத்து, சுகாதாரத்துறை மற்றும் டாக்டர்களின் பரிந்துரை இருந்தால் மட்டுமே, ஊசி போடுவதில் இருந்து விலக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.*