பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி வகுப்பு

  பிளஸ் 2 மாணவர்களுக்கு  ஆய்வக பயிற்சி வகுப்புசென்னை:பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் ஆய்வக பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன.

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 3ல் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன; மே, 21 வரை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். ஜூலையில் தேர்வு முடிவுகள் வெளியாகும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பிளஸ் 2 தேர்வுக்கான முதன்மை வெற்று விடைத்தாள்கள், மாவட்ட வாரியாக தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் வரைபடம், வரைகட்ட தாள் போன்றவற்றை இணைக்கும்படி பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், வரும் 16ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளன. இந்த தேர்வுகளை, வரும் 30க்குள் முடித்து, மதிப்பெண் பட்டியலை அனுப்ப, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி முதற்கட்டமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆய்வக செய்முறைக்கான நேரடி பயிற்சி வகுப்புகள், இன்று துவங்க உள்ளன. இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், உயிர் வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.ஏப்., 16ல் செய்முறை தேர்வுகள் துவங்கும் முன், பயிற்சி வகுப்புகள் முடிக்கப்பட்டு, செய்முறை தேர்வுக்கான பதிவேடுகளை மாணவர்களிடம் இருந்து சேகரிக்க உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.