தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்

  தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்கடலுார்; கடலுார் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கடலுார் மாவட்டத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, முதல் கட்ட பயிற்சி மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

பலரும் போட்டுக்கொண்டனர்.பயிற்சி மையத்தை பார்வையிட்ட கலெக்டர் கூறுகையில், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா தடுப்பூசி போட 13 மையங்கள் சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் அனைவருக்கும் போடப்பட்டு விடும்.கடலுார் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டோர் கண்டறியப்படுகிறது. மாவட்டத்தில் நோய் பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.