தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை எப்போது ?

 


தமிழக
காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 19.02.2021 அன்று வெளியானது. இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக நடைபெறும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance

அடுத்தகட்ட தேர்வான அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் போட்டியில் 1:5 விகிதத்தில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் தேர்வுக் குழும இணைய தளத்தில் 19.02.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது

முதற்கட்டமாக மார்ச் 8 அன்று அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வுகள் நடைபெறும் என்று வாரியம் முன்னர் அறிவித்திருந்தது. தற்போது மேற்கூறிய சோதனைகளை 08.03.2021 க்கு பதிலாக 12.04.2021க்கு ஒத்திவைக்க வாரியம் முடிவு செய்திருந்தது.

 

தற்போது இந்த தேதியையும் அரசு மாற்றிவைத்துள்ளது. 11741 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் அனைத்தும் 21.04.2021 அன்று நடைபெறும் என

தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்த உடல்தகுதி தேர்வு நடைபெறும் இடங்களையும் உறுதிப்படுத்துமாறு அனைத்து எஸ்பிக்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வுமற்றும் உடல் திறன் போட்டிகளில் கலந்து கொள்வதற்குமுன்பு அந்த அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

TNUSRB PC PET Exam Date 2021 Again Changed – Download Physical Test Hall Ticket.jpg - Google Drive