தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு 27ல் பதவி உயர்வு கவுன்சிலிங்


 சென்னை:'தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும், 27ம் தேதி முதல் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும்' என, தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு மற்றும் உள்ளாட்சி தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வரும், 27ம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தபட உள்ளது.இடைநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கவுன்சிலிங், 28ம் தேதி நடத்தப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பிப்., 27 காலையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதேநாளில் பிற்பகலில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவிக்கு, பதவி உயர்வு வழியே இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வட்டார கல்வி அலுவலர் என்ற, பி.இ.ஓ., பதவி உயர்வு கவுன்சிலிங், 28ம் தேதி நடக்க உள்ளது.

கவுன்சிலிங் முடிந்த பின், தலைமை ஆசிரியர் காலியிடங்களை, அன்றே தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் சேர்க்க வேண்டும். இந்த கவுன்சிலிங்குக்கு தகுதியானவர்கள் பட்டியல், முன்கூட்டியே தயார் செய்யப்பட வேண்டும். எந்த புகாரும் இல்லாமல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.