அழகப்பா பல்கலைக்கழகத்தின் M.Phil படிப்புக்கு இணையானது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு! pdf file

 

பல்கலைக்கழக மானியக் குழு 1956 - ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 22 - இன் கீழ் பட்டங்களை வரையறை செய்துள்ளது . நடுவண் அரசு சட்டம் அல்லது மாநில அரசு சட்டம் அல்லது 1956 - ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரிவு 3 - இன்படி பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் போன்றவற்றால் மட்டுமே அவ்வாறான பட்டங்களை வழங்க இயலும் . அழகப்பா பல்கலைக்கழகம் , தமிழக அரசின் State Legislature- இன்படி 1985 - இல் உருவாக்கப்பட்ட அரசு பல்கலைக்கழகம் ஆகும் . அழகப்பா பல்கலைக்கழகம் , பல்கலைக்கழக மானியக்குழுவின் சட்டப்பிரிவு 2 ( 1 ) மற்றும் 12 ( B ) - இன் அங்கீகாரமும் பெற்றுள்ளது , எனவே . அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் பெறும் பட்டம் மத்திய , மாநில அரசின் அங்கீகாரம் பெற்றதாகக் கருதப்படும் . மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் , தேசிய தர நிர்ணய ஆணையத்திடமிருந்து , முதல் சுற்றில் ( 2005 - இல் ) 3.01 தரப்புள்ளியுடன் ' A'Grade- ம் , இரண்டாவது சுற்றில் ( 2011 - இல் ) 3.21 தரப்புள்ளிகளுடன் ' A ' Grade- ஐத் தக்கவைத்ததுடன் , மூன்றாவது சுற்றில் ( 2017 - இல் ) 3.64 என்ற உயர்ந்த தரப்புள்ளி பெற்றதால் மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவும் இணைந்து அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு தரவரிசை -1 மற்றும் தன்னாட்சி வழங்கியுள்ளது . இதனால் பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியின்றி புதிய பாடத்திட்டங்கள் . புதிய துறைகள் , பள்ளிகள் மற்றும் மையங்கள் ஆகியவற்றை ஏற்கனவே நடத்திக்கொண்டிருக்கின்ற கல்வி கட்டமைப்புடன் ஆரம்பித்து நடத்தலாம் . அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வியல் நிறைஞர் ( கோடை காலத் தொடர்திட்டம் ) படிப்பு பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு மற்றும் நிலைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு 2016 , 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகள் நடத்தப்பெற்றன . 2016 - இல் NAAC- இன் ' A ' Grade- ம் 2017 - இல் ' A + ' Grade- ம் பெற்றதால் MHRD மற்றும் UGC- ல் Category 1 தரத்திற்கு உயர்த்தப்பட்டதால் ( UGC- இன் அனுமதியின்றி பாடங்கள் , துறைகள் , etc. ஆரம்பித்து நடத்த தன்னாட்சி பெற்றதால் அப்பட்டங்கள் UGC- இன் அனுமதி பெற்றதாகவே கருதலாம் . மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வியல் நிறைஞர் ( கோடை காலத் தொடர்திட்டம் ) படிப்பு , அழகப்பா பல்கலைக்கழகத்தின் முழுநேர படிப்பின் ஆய்வியல் நிறைஞர் படிப்பிற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ( Syllabus ) தேர்ச்சி பெறக் குறுமம் வழிகாட்டுதலுக்கான விதிமுறை , போன்றவை முறையாக பின்பற்றப்பட்டுள்ளதால் இப்படிப்பு பகுதிநேரப்படிப்பிற்கு இணையானதாகக் கருதலாம்.click here to download