பிளஸ் 2 மறுகூட்டல் 15ல் 'ரிசல்ட்'

 

சென்னை:பிளஸ் 1, பிளஸ் 2 துணை பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு, 15ம் தேதி மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகின்றன.

அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திகுறிப்பு:பிளஸ் 1, பிளஸ் 2 துணை பொதுத்தேர்வை, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் எழுதிய மாணவர்களுக்கு, மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கான முடிவுகள், வரும், 15ம் தேதி வெளியாகின்றன.விண்ணப்பித்த தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், 15ம் தேதி பிற்பகல், 2:00 மணி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பெயர் மட்டும், பட்டியலில் இடம் பெறும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.