அரசு /அரசு உதவி பெறும் பள்ளி/ நகராட்சி/ மாநகராட்சி/ உயர், மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் - வழக்கின் விசாரணை விபரம்

 

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் .சங்கர் அறிக்கை 

அரசு /அரசு உதவி பெறும் பள்ளி/ நகராட்சி/ மாநகராட்சி/ உயர், மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்

போன்ற  கோரிக்கைகள் அடங்கிய வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது .

 நமது சார்பில் நமது வழக்கறிஞர் ஆஜராகி அதிகப்படியான விளக்கங்களை அளித்துள்ளார் தமிழக அரசு உடனடியாக இதன் சார்பான தகவல்களை உடனே பதில் மணு அளிக்குமாறு

நீதிமன்றம் பள்ளிக்கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 நமது வழக்கு மெருகூட்டும் வகையில் வழக்கறிஞர் சில முக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து சில மாநிலங்களில் நமக்கு சாதகமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்ற ஆணைகளையும் இதில் இணைத்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்

 அடுத்த விசாரணை  தேதி 30 /11/ 2020 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 இவண்

.சங்கர்

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்