ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி

 


சென்னை; அகில இந்திய குடிமை பணி முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, இலவசமாக இணைய வழி பயிற்சி வகுப்புகள், தமிழக அரசின், அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

பயிற்சி வகுப்பில், 'யு டியூப்' வழியே, விருப்பம் உள்ள அனைவரும் இணைந்து கொள்ளலாம். மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், கல்வித் துறையினருக்கும் பயன்படும் வகையில், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்திய வரலாறு, புவியியல், தொடக்க கால தமிழக வரலாறு, உலக பொருளாதார சூழல், இந்திய பொருளாதார சூழல் என, பல்வேறு பாடத்தலைப்புகளில், மிகச்சிறந்த அறிஞர்கள் கருத்துரையாற்ற உள்ளனர்.காலை, 11:00 முதல், 12:30 மணி வரை; பகல், 2:00 முதல், 3:30 மணி வரை, இவ்வகுப்புகள் நடக்கும். இதில் பங்கேற்க பதிவுகள் எதுவும் தேவையில்லை. இணையதள முகவரி, www.civilservicecoaching.com; 'யூ டியூப் பெயர், AICSCCTN; யூ டியூப் லிங்க், www.youtube.com/channel/UCb1igYSU74A8IS 4sW0VqNQ