தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிக அளவில் சேர்ப்பு" - தனியார் பள்ளி சங்கம் குற்றச்சாட்டு

  தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிக அளவில் சேர்வதால் தனியார் பள்ளிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து  பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,தனியார் பள்ளியில் பழைய கட்டணத் தொகையை  கட்டாமலும், மாற்று சான்றிதழ் இல்லாமலும் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருவதாக கூறியுள்ளனர்.