இன்றைய காலகட்டத்தில் பல சாமானிய மக்களின் ஒரே ஆசையே வீடு கட்ட வேண்டும் என்பது தான். ஆனால் அது பலருக்கும் எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றது. ஆனால் அவர்களில் பலரும் நாடும் ஒரே இடம் வங்கி தான். ஏனெனில் வங்கிக் கடன் வாங்கியாவது சின்னதாக ஒரு வீடுகட்டி விட மாட்டோமா? என்பது தான். ஆக இப்படி வீடு கட்ட நினைக்கும் பெரும்பாலானோருக்கும் கை கொடுப்பது வங்கிக் கடன் தான். ஆனால் அந்த வங்கிக் கடனிலும் சிறப்பான சலுகைகள் கிடைக்கிறது என்றால் கசக்கப் போகிறதா என்ன? நிச்சயம் இல்லை. அப்படி வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி அதிரடியான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதனை பற்றித் தான் பார்க்கப்போகிறோம் வாருங்கள்.
ஹோம் உத்சவ் திட்டம் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ, ஹோம் உத்சவ் என்ற திட்டத்தினை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் பிரபலமான டெவலப்பர்களால், ரியல் எஸ்டேட் திட்டங்களை டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களுக்குக் காண்பித்து விற்பனை செய்யும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயன் இந்த அதிரடியான திட்டத்தின் மூலம் ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல. மற்றவர்களும் இதனை பற்றி தெரிந்து கொண்டு பயன்பெறலாம். இந்த ஆன்லைன் திட்டத்தின் மூலம் வீடு உள்ளிட்ட சொத்துகளை வாங்குவதில் கவர்ச்சிகரமான குறைந்த வட்டி விகிதங்கள், சிறப்பு செயலாக்க கட்டணம் மற்றும் கடன்களின் டிஜிட்டல் அனுமதி போன்ற பிரத்தியேக சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகை அது மட்டும் அல்ல ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் இந்த அதிரடியான திட்டத்தின் மூலம் கூடுதல் சலுகைகளைப் பெற முடியும். குறிப்பாக குறைந்த வட்டியில் வீடு வாங்க முடியும். எனினும் இந்த திட்டமானது முதல்கட்டமாக மும்பை மற்றும் புனே நகரங்களில் தான் தொடங்கப்பட்டுள்ளது.
விரைவில் இங்கும் உண்டு எனினும் விரைவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் குஜராத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. ஆனாலும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் www.homeutsavicici.com என்ற இணையதளம் மூலம் யார் வேண்டுமானாலும் இந்த கண்காட்சியில் பங்கேற்கலாம். குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க நல்ல விஷயம் என்னவெனில், இந்த திட்டத்தில் பங்கேற்கும் வாடிக்கையாளர்கள் வங்கியின் வாடிக்கையாளர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களின் கனவு வீடுகளை வாங்க, குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் கருத்தில் கொண்டு, மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் சொத்துப் பதிவுகளில் முத்திரைக் கட்டணத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.