புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் -பள்ளிக் கல்வித்துறை

 இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில்  ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்து புதிய கல்விக் கொள்கை தொடர்பாக எழுத்துப்பூர்வமாக நாளை மாலைக்குள் கருத்துக்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியர்கள் தங்கள்  கருத்துக்களை இணையதளம் வாயிலாக மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் தற்போது தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.

ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களை ஆராய்ந்து உரிய கருத்துகளை  மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.