தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய முடிவு!

 ப்பது? என்பது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குநர்கள் கண்ணப்பன், உஷா ராணி, பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஆலோசனையில், பள்ளிகளைத் திறக்கும் தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்திருப்பதாகவும், தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சரின் ஒப்புதல் கிடைத்த உடன், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.