நீட் தேர்வு: 7 மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

 

டெல்லி: நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி புதுச்சேரி, மேற்கு வங்கம் உட்பட 7 மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 11 மாணவர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 17-ந் தேதி தள்ளுபடி செய்தது.

 

இதனிடையே புதுச்சேரி, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டன. அதில் தற்போதைய சூழ்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் 7 மாநிலங்களும் வலியுறுத்தி இருந்தன.