புதுச்சேரியில் அக்.,5 முதல் பள்ளிகளில் 10,12ம் வகுப்புகள் துவக்கம்

 puducherry, school, reopen, october 5th, புதுச்சேரி, பள்ளிகள், திறப்பு, அக்டோபர் 5புதுச்சேரியில்: புதுச்சேரியில் வரும் அக்.,5 முதல் பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகள் துவங்கப்படும் என மாநில முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த 6 மாதங்களாக நாடெங்கும் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்புக்கு பின் திறக்கப்படுகின்றன.

புதுச்சேரியில் (செப்.,27) நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி,‛ புதுச்சேரியிலும் காரைக்காலிலும் பள்ளிகளில் வரும் அக்., 5 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகள் நடைபெறும். வகுப்புகளில் மாணவர்கள் பாட சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். . அதே போல் வரும் அக்., 12 முதல் பள்ளிககளில் 9 மற்றும் 11ம் வகுப்புகள் நடக்கும். மாணவர்கள் வகுப்புகளில் பாட சம்பந்தப்பட்ட சந்தேகங்களை ஆசிரியர்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். வகுப்புகள் பல பிரிவுகளாக நடக்கும்.எனினும் கொரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் பள்ளிகளில் வகுப்புகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வகுப்புகள் நடக்காது. பள்ளிகளில் சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்' இவ்வாறு கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார்.