TET - நிபந்தனை ஆசிரியர்களுக்கு கருணை காட்டுமா தமிழக அரசு ?

 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் தகுதித்தேர்வு நிபந்தனை ஆசிரியர்களுக்கும் கருணை காட்டுமா தமிழக அரசு?

பணியில் சேர்ந்து பத்தாண்டுகள் நிறைவடைந்தும், டெட் நிபந்தனை ஆசிரியர்களுக்கு, விலக்கு அளிக்காததால், எவ்வித சலுகையும் பெற முடியாத சூழல் நீடிப்பதாக, பலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி(ஆர்.டி.), ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) 2010 ஆக., 23ம் தேதி கட்டாயமாக்கப்பட்டது.

இச்சட்டம் தமிழகத்தில், 2012 நவம்பர் 16ம் தேதிக்குப் பிறகு ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு அவசியம் என்று தமிழக கல்வித் துறை ஓர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. மத்திய அரசு சட்டமியற்றிய பின்பும், தமிழக அரசு, பழைய நடைமுறைப்படி தான், ஆசிரியர்களை நியமித்தது. ஆனால், ஆர்.டி.., சட்டத்தை ஏற்ற பின், டெட் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள், அரசுப்பணியில் தொடர வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டது.இதற்கு எதிராக, கோர்ட்டில் வழக்கு தொடுத்து, அரசுப்பள்ளி மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரிவோர் விலக்கு பெற்றனர். இவர்களுடன் பணியில் சேர்ந்த அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், விலக்கு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.

மாநிலம் முழுக்க, வெறும் ஆயிரத்து 700 ஆசிரியர்களே, டெட் நிபந்தனையில் இருந்து விலக்கு கோருவதால், சிறப்பு தேர்வோ அல்லது பணியிடை பயிற்சிகளோ வழங்கப்படும் என, கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையே ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், இது சார்ந்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. தற்போதுள்ள சூழலில் தேர்வுகள் ரத்து செய்துவரும் நிலையில் இவர்களுக்கு கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஆன்லைன் மூலம் புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து இவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும், எந்த பலன்களும் பெற முடியாமல் தவிப்பதாக, ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.இது குறித்து, டெட் நிபந்தனை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'மத்திய அரசின் கட்டாய கல்விச்சட்டம் இரு ஆண்டுகளுக்கு பின்பே, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், பணியில் சேர ஒப்புதல் வழங்கிவிட்டு, கடந்த 8 ஆண்டுகளாக இவர்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மேலும் இவர்களுக்கு ஊக்க ஊதியம் மற்றும் ஊதிய பலன்களை நிறுத்த கூடாதென ஐகோர்ட் உத்தரவிட்டும், அந்த உத்தரவு இன்றுவரை மதிக்கப்படவில்லை.

குறிப்பாக பத்தாண்டுகளானால் தேர்வுநிலை ஆசிரியர்களாக தரம் உயர்த்தப்படுவது வழக்கம்.

அரசுப்பள்ளியில் சேர்ந்தோருக்கு இச்சலுகை வழங்கப்படும் போது, அதே நாளில் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்தோர், எந்த சலுகையும் இன்றி திண்டாடும் நிலை நீடிக்கிறது. விரைவில் அரசு 1700 டெட் நிபந்தனை ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு, செவிசாய்க்க வேண்டும்' என்றனர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடுத்து, அரசுப்பள்ளி மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரிவோர் விலக்கு பெற்றனர். இவர்களுடன் பணியில் ' என்பது குறிப்பிடத்தக்கது.