கோரப்படும் தகவல்கள் :
1. M.SC. , மற்றும் M.PHIL . , கல்வித்தகுதியின் மூலம் பள்ளிக்கல்வி துறையின் கீழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் M.SC. , பட்டப்படிப்பிற்க்கு ஒரு உயர் கல்வி ஊக்க ஊதியம் பெற்றுள்ள நிலையில் M.PHIL . , பட்டப்படிப்பை பயின்றமைக்கு இரண்டாம் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்க்கு தகுதியுண்டா என்பதனையும் அதன் அரசாணை எண் மற்றும் அரசாணை நகலினை அனுப்பும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
2. பார்வை 1. ல் கண்ட அரசாணையின் படி பள்ளிக்கல்வி துறையின் கீழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட M.PHIL . , பட்டப்படிப்பை பயின்றமைக்கு இரண்டாம் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெற தடையாணை ஏதேனும் பெறப்பட்டுள்ளதா அதற்க்கான ஆணையின் நகலினை அனுப்பும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
