அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்பிற்கான (Ph.D. and M.Phil.) இணைய வழி விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. இணைய வழி மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக இணையத்தளம் (www.annamalaiuniversity.ac.in) மூலம் பதிவு செய்யலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.