Google People Card" வசதியை எப்படி பெறுவது?
இணையம், நாளுக்கு நாள் வியக்கவைக்கும் விளைவுகளையும் மாற்றங்களையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கிடையிலான இடைவெளி இணையத்தால் வெகுவாக சுருங்கிவிட்டது. இப்போது அந்த இடைவெளியை இன்னும் குறைக்கும் வகையில் ஒரு வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது கூகுள்.
ஏற்கனவே நிறுவனங்களுக்கும் பிரபலங்களுக்கும் 'Knowledge Panel' என்ற வசதியை கூகுள் வழங்குகிறது. ஒரு பிரபலத்தைப் பற்றி நீங்கள் கூகுளில் தேடும்போது, வலதுபக்கம் அந்த பிரபலத்தைப் பற்றிய சுருக்கமான அறிமுகம், முகவரி, இணையதளம் மற்றும் சமூக ஊடக முகவரிகள் என முக்கியமான விஷயங்களை தனித்துக் காட்டும். இதன் மூலம் தேவையான விஷயங்களை எளிதாகப் பெறமுடியும்.
இப்போது, இந்த வசதியின் இன்னொரு வடிவத்தை இந்தியாவில் அனைவருக்குமானதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். உங்கள் பெயரை கூகுளில் யார் தேடினாலும் உங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு இனி கிடைக்கும். இந்த வசதிக்கு 'People Card' என பெயர் சூட்டியிருக்கிறது கூகுள்.
`Google People Card' வசதியை எப்படி பெறுவது?
உங்களுடைய gmail முகவரி மூலம் லாகின் செய்து கொள்ளுங்கள். பிறகு, Google Search-ல் சென்று உங்களுடைய பெயர் அல்லது ‘Add me to Search’ அல்லது 'Edit My Search Card' என தேடவும்.
'Add me to Search’ எனக் காட்டும் லிங்கை க்ளிக் செய்யவும்
இப்போது லோட் ஆகும் பக்கத்தில் உங்கள் கூகுள் அக்கவுண்ட்டிலிருந்து ஏற்கனவே சில விஷயங்கள் பெறப்பட்டிருக்கும், உங்களுடைய புரொபைல் படம், பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் (உங்கள் தொலைபேசி எண்ணை நீங்கள் அப்டேட் செய்யாமல் இருந்தால், இப்போது கட்டாயம் செய்யவேண்டும்) போன்றவை. இந்த அடிப்படை தகவல்கள் தாண்டி, உங்களைப்பற்றிய சுருக்கமான அறிமுகம், உங்கள் வேலை, வேலை செய்யும் நிறுவணம், சோசியல் மீடியாக்களின் முகவரி போன்றவற்றை அப்டேட் செய்து சப்மிட் செய்யவேண்டும். சில நிமிடங்கள் கழித்து உங்களுடைய Profile card கூகுள் தேடலில் அப்டேட் ஆகிவிடும். எவரும் உங்களைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளமுடியும்.
இந்தியாவில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டாலும் பலருக்கு அவர்களுடைய பெயரை வைத்து தேடும் போதோ அல்லது “Add me to Search” என தேடும் போதோ இந்த வசதி காட்டுவதில்லை என கூகுள் சப்போர்ட் ஃபோரம்களில் கேட்டிருக்கிறார்கள். அப்படி உங்களுக்கு காட்டவில்லை என்றால் நீங்கள் மேலே சொன்ன வழிமுறைகளில் இரண்டாவது ஸ்டெப்பிற்குப் பதிலாக https://www.google.com/search/contributions/profile இந்த முகவரிக்குச்
சென்று மற்ற விஷயங்களை அப்டேட் செய்துகொள்ளலாம்.
CLICK HERE TO VIEW DEMO VIDEO