மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வருமான வரிச்சலுகை

 


இந்தியாவின் வருமான வரிச் சட்டம் மூத்த குடிமக்களுக்கும், மிக மூத்த குடிமக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளது. 60 வயது முதல் 80 வயது வரையிலான நபர் 'மூத்த குடிமகன்' என்றும் 80 வயதுக்கு மேற்பட்ட நபர் 'மிகவும் மூத்த குடிமகன்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
மருத்துவ செலவுகள் மற்றும் வைப்புத்தொகைகளில் கிடைக்கும் வட்டி போன்றவற்றின் அடிப்படையில் மூத்த மற்றும் மிக மூத்த குடிமக்களுக்கு வருமான வரி சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

2020-21 நிதியாண்டில், ஒரு மூத்த குடிமகனுகான வருமான வரி விலக்கு வரம்பு, ₹3,00,000. மூத்த குடிமக்கள் அல்லாத சாதாரண பொது மக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ₹2,50,000. சாதாரணமாக வரி செலுத்துவோருடன் ஒப்பிடும்போது, ₹ 50,000 என்ற அளவிற்கு கூடுதலாக வருமான வரி விலக்கு கிடைக்கிறது.

மிகவும் மூத்த குடிமகனுக்கு, மிக அதிக அளவாக, ₹5,00,000 வரை வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது.

முன்கூட்டியே வரி செலுத்துவதில் இருந்து விலக்கு

பிரிவு 208-ன் கீழ், ஒரு ஆண்டுக்கான வரி ₹ 10,000 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் ஒவ்வொரு நபரும் தனது வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும். இருப்பினும், பிரிவு 207-ன், மூத்த குடிமக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது



வருமான வரி தாக்கலை ஆவணம் மூலம் மேற்கொள்ளுதல்

வருமான வரி தாக்கல் செய்யும் போது, படிவம் ஐடிஆர் 1 அல்லது ஐடிஆர் 4 ஆகியவற்றில் வருமானத்தை தாக்கல் செய்யும் மிக மூத்த குடிமகன் தனது வருமானத்தை கணிணி முறையில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் தங்கள் விருப்பபடி ஆவண முறையில் அல்லது கணிணி முறையில் என எதை வேண்டுமானாலும் தேர்தெடுக்கலாம்.

வங்கி வைப்புகளில் வட்டி வருமானத்தில் கழித்தல்

வைப்புத்தொகை மற்றும் வங்கிகள் அல்லது தபால் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை ஆகியவற்றின் மூலம் ஈட்டப்பட்ட ₹ 50,000 வரை வட்டிக்கு 80TTB-ன் கீழ் சலுகை கிடைக்கும்.

மேலும், 50,000 வட்ட வருமானம் வரை வட்டி வருமானத்தில் வரி கழிக்கப்படாது. 50,000 என்ற இந்த வரம்பு ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியாக கணக்கிடப்படும்.

மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொடர்பான சலுகை

ஒரு மூத்த குடிமகனால் ஒரு வருடத்தில் செலுத்தப்படும் மருத்துவ காப்பீடு தொகையில், ₹50,000 வரையிலான தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-ன் கீழ் விலக்கு அளிக்க அனுமதிக்கப்படுகிறது. மூத்த குடிமகன் தனது பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தை செலுத்துகிறார் என்றால், அந்த தொகைக்கும் ₹50,000 வரை கூடுதல் விலக்கு கோரலாம்.

குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை தொடர்பான சலுகை

பிரிவு 80DDB-ன் கீழ், ஒரு மூத்த குடிமகன் வரி செலுத்துவோர் குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காக அவர் செலவழித்த ₹1,00,000 வரை  வரையிலான தொகைக்கு விலக்கு கோரலாம்.