முதுநிலை இன்ஜினியரிங் 'ஆன்லைன் கவுன்சிலிங்'

 சென்னை; முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகளுக்கு, 'ஆன்லைனில்' கவுன்சிலிங் நடத்த, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று பிரச்னையால், அனைத்து வகை பணிகளும், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆன்லைனில்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அதேபோல, கலை, அறிவியல் கல்லுாரிகள், பி.இ., - பி.டெக்., கல்லுாரிகள் போன்றவற்றில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து, முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கையும், ஆன்லைன் முறையில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அனுமதியை, அண்ணா பல்கலைக்கு, உயர் கல்வித்துறை வழங்கியுள்ளது.