அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி குறைப்பு

 சென்னை; கொரோனா தடுப்பு பணியின் போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறக்கும், அரசு ஊழியர்கள் குடும்பத்திற்கு, நிவாரண நிதி, 25 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வர், 50 லட்சம் ரூபாய், நிவாரண நிதி அறிவித்தார். அதன்பின், அனைவருக்கும் ஒரே மாதிரி, 25 லட்சம் ரூபாய் வழங்க, முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது' என்றனர்.முதல்வர் நிவாரண நிதி அறிவித்தபோது, அதிகம் பேர் இறப்பர் என்று எதிர்பார்க்கவில்லை.

தற்போது, கொரோனா பரவலால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்கள், 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நிதி நெருக்கடி உட்பட, பல்வேறு காரணங்களால், நிவாரண நிதி, 25 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.