அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்த அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

Tamil_News_2008_2020__983379542827607 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்த அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாலப்பள்ளி கிராம பள்ளி ஆசிரியர் பாலகிருஷ்ணன்(50) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். பெட்டியில் தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிலையில் ஆசிரியர் பாலகிருஷ்ணனை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி உத்தரவிட்டுள்ளார்.