பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சூழலுக்கேற்றவாறு சுழற்சி முறையில் பள்ளிகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் இருந்தாலும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட வாரியாக கருத்து கேட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் தலா 10 முதல் 20 பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாக கருத்துகளை பெற்று அதன் விவரங்களை அறிக்கையாக தொகுத்து அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப் பெற்ற கருத்துகளின்படி பள்ளிகள் திறப்பை தாமதபடுத்தி, பாடநூல்களை கொடுத்து கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது.