ஐஏஎஸ் தேர்வில் வென்ற பார்வையற்ற மாற்றுதிறனாளி #பூரண_சுந்தரி.வாழ்த்துகள்

மாநகர் மதுரையின் சிறப்புக்குச் சிறப்பு சேர்த்துள்ள மாணவியைப் பாராட்டி மகிழ்வோம்.

ஐஏஎஸ் தேர்வில் வென்ற பார்வையற்ற மாற்றுதிறனாளி  #பூரண_சுந்தரி.வாழ்த்துகள்
இந்திய ஆட்சிப் பணித் தேர்வின் முடிவுகள்(2019) வெளியாகியுள்ளன. இதில்  மதுரை சிம்மக்கல் அருகேயுள் மணிநகரம் பகுதியை சேர்ந்த முருகேசன்- ஆவுடை தேவி என்ற தம்பதியினரின்
மகளான பூரண  சுந்தரி தேர்வு பெற்றுள்ளார். இவர் 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் தனது பார்வையை முழுமையாக இழந்த மாற்றுத்திறனாளி ஆவார்.

உடல் குறைபாடுகளை முயற்சிகளால் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை மெய்பிக்கும் மனிதர்களின் வரிசையில் பூரணசுந்தரியும் இணைந்துள்ளார். அவருக்கு நமது அன்பான வாழ்த்துகள்.

அவரின் முயற்சிக்குப்பின்னே அவரது மொத்தக் குடும்பமும் உள்ளது.
 அவரைத் தளராது ஊக்குவித்த அந்தப் பெற்றோர்களைப் பாராட்டி மகிழ்வோம்.

வாழிய பேராற்றல். - மனிதத்தேனீ