அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில், புதுச்சேரி மாநிலத்தில், முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவியை, அமைச்சர், கலெக்டர் பாராட்டினர்.
காரைக்கால், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்; கப்பலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா. தம்பதியின் மகள் சரண்யா, 27; காரைக்கால் ஓ.என்.ஜி.சி., பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லுாரியில், இ.சி.இ., பிரிவில், 2015ல், பட்டம் பெற்றார். மூன்றாவது முறையாக எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில், அகில இந்திய அளவில், 36வது இடத்திலும், புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்திலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.