புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் நாளை முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தேசிய கல்வி கொள்கை பல்வேறு தரப்பிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி பாடம், கல்லூரிகளில் சேர்வதற்கு தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, 3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளிட்ட அம்சங்களில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
இந்த
நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோர் நாளை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.