அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரையும் விஞ்ஞானிகளாக்குவதே இலக்கு!’ - அசத்தும் கரூர் ஆசிரியர்

 vikatan_2020-08_635c0667-19ed-45a1-93d6-0d1a00fc3a76_online_uraiyaadalஇணையவழிக் கற்றல் மூலம் தொடர்ந்து மாணவர்களிடம் உரையாடி, அவர்களை இளம் விஞ்ஞானிகளாக்கத் தொடர்ந்து முயல்வேன். லாக்டௌன் காலத்தில் மாணவர்களின் அறிவியல் சிந்தனைகளைத் தூண்டும் வகையில் இந்தக் காணொலிக் காட்சி மூலம் நடக்கும் பயிற்சிகள் இருக்கும்.’


அரசுப் பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்க ஏதுவாக, மாணவர்களுடன் தொடர்ந்து உரையாடும் பொருட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிவியல் பாடத்துக்கான ஆசிரியராக, கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேர்வாகியிருப்பது, கரூர் மாவட்ட கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


கரூர்: `110 கிலோமீட்டர் பயணம்; இலவசப் புத்தகம்' - வீட்டின் அருகே பாடம் நடத்திய ஆசிரியர்இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவோம்' என்ற முயற்சியில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் இறங்கியிருக்கிறது. இதன் மூலம், இணையவழியில் காணொலிக் காட்சி மூலமாக அரசுப் பள்ளியில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் சார்ந்த ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், அறிவியல் பாடத்துக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவில் கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த முதுகலை இயற்பியல் ஆசிரியர் தனபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆன்லைன் உடையாடல்
இணையவழி காணொலிக் காட்சி நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அதன்படி, சமீபத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் வசந்தி தேவி வரவேற்புரை நிகழ்த்தினார். கும்பகோணம் ஆசிரியை புவனா அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி, முதுகலை இயற்பியல் ஆசிரியர் தனபால்,`அரசுப் பள்ளியில் இளம் விஞ்ஞானி மாணவர்களை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.


அவர் வழிகாட்டி ஆசிரியராக அரசுப் பள்ளி மாணவர்களுடன், கடந்த 14 ஆண்டுகளில் அறிவியல் கண்டுபிடிப்பு படைப்புகளைக் காட்சிப்படுத்தும்விதத்தில் மாவட்டம், மாநிலம், தென்னிந்தியா, தேசியம் மற்றும் சர்வதேச அளவில் (ஜப்பான், பின்லாந்து, ஸ்வீடன்) மாணவர்களுடன் 88,300 கி.மீ பயணித்திருக்கிறார். அதன் மூலம் பல்வேறு விருதுகளும் பரிசுகளும் பெற்ற அறிவியல் பயணம் குறித்த தனது அனுபவங்களைக்கொண்டு, அரசுப்பள்ளியில் 404 மாணவர்களை `இளம் விஞ்ஞானிகள்சான்று பெறும் வகையில் உருவாக்கியிருக்கிறார். 20 அறிவியல் கண்டுபிடிப்புச் செயல்பாடுகள், களப்பயண அனுபவங்கள், ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் நாடகம், குறும்படம் தயாரித்தல், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துதல் என தீவிரமாக இயங்கிவந்திருக்கிறார். அதன் மூலம் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க எடுத்துக்கொண்ட 

அதை எல்லோருக்கும் எளிதில் புரியும் வகையில், 100 விளக்கக் காட்சிப் படங்கள் மூலம் காணொலியில் விளக்கினார். மேலும், 25-க்கும் மேற்பட்ட எளிய இயற்பியல் பரிசோதனைகளையும் செயல் விளக்கமாகச் செய்து காட்டினார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இணையவழியில் வினாக்கள் கேட்டு தனபாலிடம் உரிய விளக்கம் பெற்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இது போன்ற இணையவழிக் கற்றல் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கியிருக்கிறது.


இது குறித்து, ஆசிரியர் தனபாலிடம் பேசினோம்.

``இணையவழிக் கற்றல் மூலம் மாணவர்களிடம் உரையாடி, அவர்களை இளம் விஞ்ஞானிகளாக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வேன். லாக்டௌன் காலத்தில் மாணவர்களின் கவனம் வேறு திசையில் செல்லாமல் இருக்கவும், அவர்களின் அறிவியல் சிந்தனைகளைத் தூண்டும்வகையில் இந்த காணொலிக் காட்சி மூலம் நடக்கும் பயிற்சிகள் இருக்கும்.


                                                                    தனபால்