பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு - "சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர் மட்டுமே அழைக்கப்படுவர்"

 

பொறியியல் கலந்தாய்விற்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்கள் மட்டுமே கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர் என பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பிற்கு கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 24 ஆம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது . இதனையடுத்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் கலந்தாய்விற்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஒரு லட்சத்து 31ஆயிரத்து 436 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்விற்கு கட்டணம் செலுத்தியுள்ளனர் . இவர்களில் ஒரு லட்சத்து  14 ஆயிரத்து 206 மாணவர்கள் மட்டுமே  சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர் .இவர்களில், சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள மாணவர்கள் மட்டும் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள் என பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.