பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய செயலி மூலம் சம்பளம் ஏற்றுவதில் குழப்பம் – ஆசிரியர்கள் அதிருப்தி

maxresdefault
சாத்தான்குளம், ஆக. 4:

திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய செயலி மூலம் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஏற்றுவதில் குழப்பம் ஏற்பட்டு ஆசிரியர்கள் அலைகழிக்கப்படுவதால் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் திருச்செந்தூர்,, சாத்தான்குளம், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, ஏரல், திருவைகுண்டம், கருங்குளம் ஆகிய வட்டாரத்தில் உள்ள பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் தொடக்க, நடுநிலைபள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் மாதம் வரை அனைத்து ஆசிரியர்களுக்கும் பழைய முறையான .சி.எஸ் முறைப்படி சம்பளம் ஏற்றப்பட்டு வந்தது.

இதன்மூலம் சம்பளம் மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் வரவு ஆகி வந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஜூலை மாத சம்பளம் கல்வித்துறையில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள .எப். ஹெச். ஆர். எம்.எல் என்ற புதிய செயலி மூலம்தான் சம்பளம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் சம்பளம் வழங்கப்படுவது தாமதம் ஆகும் எனவும், ஆதலால் தெளிவுப்படுத்தி, அதற்கான பயிற்சி அளித்து புதிய செயலி மூலம் சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் மேல்நிலைப்பல்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் ஜூலை மாத சம்பளம் அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் வட்டாரத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. திருச்செந்தூர் உள்ளிட்ட பிற வட்டாரங்களில் சிலருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது தற்போது ஆசிரியர்களுக்கு சம்பளம் சம்பளம் வழங்குவதற்காக கல்வித்துறை மூலம் அறிவிக்கப்பட்டுல்ள செயலி குறித்து மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் மற்றம் கருவூல அதிகாரிகளுக்கு கரோனா தடுப்பு பணி காரணமாக அதற்கான பயிற்சி அளிக்கப்படவில்லை.

இதனால் எவ்வாறு சம்பளம் பரிவேற்றம் செய்வது என குழப்பத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சம்பளம் விசமாக மாவட்ட கருவூல அலுவகத்திற்கு சென்றால் வட்டார கல்வி அலுவலகத்துக்கு செல்லுமாறும், இதைபோல் வட்டார கல்வி அலுவலகத்துக்கு ஆசிரியர்கள் சென்றால் மாவட்ட கருவூலகத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுவதாக ஆசிரியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் சம்பளம் ஏற்றப்படுவது குறித்து மாவட்ட கருவூலக அலுவலகத்தில் இருந்து கணக்கு முறையாக வட்டார கல்வி அலுவலர்களுக்கு தாக்கல் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு மாத கடைசியில் சம்பளம் அவரது வங்கி வரவு ஆகிவிடும் . ஆனால் தற்போது புதிய செயலி மூலம் சம்பளம் ஆக. 4ஆம்தேதி ஆகியும் ஏற்றம் செய்யப்படாமல் தாமதம் ஆகி வருவதால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதுடன் அதிருப்தியும் தெரிவித்துள்ளள்ளனர். ஆதலால் புதிய செயலி மூலம் ஆசிரியர்கள் அலைகழிக்கப்படாமல் உடனடியாக சம்பளம் ஏற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், இந்த புதிய செயலியால் சம்பளம் ஏற்றுவது குழப்பம் ஏற்பட்டு தாமதம் ஏற்படும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்துள்ளோம். ஆதலால் மாவட்ட நிர்வாகம் இதனை கவனித்து கரோனா நேரத்தில ஆசிரியர்கள் அலைகழிக்கப்படாமல் உடனடியாக சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.