சென்னை; இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இன்று முதல், 'ஆன்லைன்' வகுப்புகள்
துவக்கப்படுகின்றன.கொரோனா தொற்று பரவல் காரணமாக, மார்ச் முதல் கல்லுாரிகள்
மூடப்பட்டு உள்ளன. இறுதியாண்டு தவிர, மற்ற மாணவர்களுக்கு, செமஸ்டர்
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், முதலாம் ஆண்டு தவிர, மற்ற
மாணவர்களுக்கு, இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்குகின்றன.'நடப்பு
பருவத்துக்கான செமஸ்டர் வகுப்புகளை, அக்டோபர், 26க்குள் முடிக்க வேண்டும்;
செய்முறை தேர்வுகளை, அக்., 28ல் துவக்கி, நவம்பர், 9க்குள் முடிக்க
வேண்டும்' என, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது.