2 ஆண்டு மருத்துவ டிப்ளமா படிப்பு துவக்க முடிவு

 

புதுடில்லி; இரண்டு ஆண்டு மருத்துவ முதுநிலை, டிப்ளமா படிப்புகளை துவக்க, என்.பி.இ., எனப்படும், தேசிய தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

கடந்த, 2019ல், இந்திய மருத்துவ கவுன்சில், மருத்துவம் தொடர்பான டிப்ளமோ படிப்புகளை ரத்து செய்து, பட்டப்படிப்புகளாக மாற்றியது. இந்நிலையில், இரண்டு மருத்துவ முதுநிலை டிப்ளமா படிப்புகளை துவக்க, என்.பி.இ., முடிவு செய்துள்ளது. 


இந்த டிப்ளமோ படிப்புகளில், மயக்க மருந்தியல், மகப்பேறு, குழந்தைகள் நலம், காது, மூக்கு மற்றும் தொண்டை, கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் இடம் பெறவுள்ளன. முதுநிலை, &'நீட்&' தேர்வு மூலமாக, இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என, என்.பி.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.