சென்னை; அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதுநிலை இன்ஜி., படிப்பதற்கான ஆன்லைன் பதிவு, வரும் 28ம் தேதி துவங்க உள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு, புதிய மாணவர்களை சேர்க்க, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும், 28ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு துவங்க உள்ளது. செப்.,14 வரை ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்களை, http://www.annauniv.edu/tanca2020 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், 044 - 2235 8401/02/03 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக பொது மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்து உள்ளது.