15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி பள்ளிகளில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது பற்றி முதல்வர் அறிவிப்பார்

தற்போதைய சூழலில் தமிழகத்தில் ள்ளிகளைத் திறப்பதற்கே வாய்ப்புகள் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் உழைக்கும் பெண்களுக்கு தமிழக அரசின் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பங்கேற்றார்.+-
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “இப்போது இருக்கும் சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கே வாய்ப்பில்லாத சூழலாக உள்ளது. படிப்படியாக இந்த தொற்றுநோய் குறைகின்ற போதுதான் பொது மக்கள், பெற்றோரின் கருத்துக்களை அறிந்து பள்ளிகளைத் திறப்பது பற்றி முடிவெடுப்பது என்பது அரசின் முடிவாக உள்ளது.
  
வருகிற 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி பள்ளிகளில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது பற்றி முதல்வர் அறிவிப்பார். தற்போது ஊரடங்கு உள்ள நிலையில் அதை எப்படி செயல்படுத்தலாம் என்பதைப் பற்றி முதல்வர் தான் தீர்மானிப்பார்என்றார்.